அக்டோபர் 23, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் முறையிலான வணிக செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் நிறுவனம் அமேசான் (Amazon). கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI Technology) தொழில்நுட்பம் காரணமாக, பல மென்பொருள் மற்றும் வணிக நிறுவனங்கள் மனிதர்களை பணியில் இருந்து எடுத்துவிட்டு, அதனை தொழில்நுட்பம் கொண்டு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இளைஞர்கள் வேலையை இழந்து தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். எதிர்வரும் ஆண்டுகளிலும் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக கணினி, இயந்திரம் என ஒவ்வொரு துறையிலும் வேலை இழப்புகள் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 லட்சம் பேருக்கு அமேசான் கொடுத்த அதிர்ச்சி:
இந்நிலையில், அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் முதல் வளரும், வளர்ந்த, வளர்த்துக்கொண்டு இருக்கும் பல நாடுகளில் இ-காமர்ஸ் வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவனம் 5 லட்சம் பேரின் வேலைக்கு 10 ஆண்டுகளில் ஆப்பு வைக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. தனது நிறுவனத்தில் மனிதர்களை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை தேவையான இடங்களில் பயன்படுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 5 லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகி இருக்கிறது. உலகளவில் இந்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளது. அமேசான் நிறுவனத்தின் முடிவு காரணமாக, வரும் ஆண்டுகளில் பணிநீக்க நடவடிக்கை அதிரடியாக தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ChatGPT Atlas: கூகுளுக்கே சவால்.. க்ரோம்க்கு போட்டியாக வந்தது சாட்ஜிபிடி அட்லாஸ்.. வசதிகள் ஏராளம்.!
ரோபோட்களுக்கு வேலைவாய்ப்பு:
ஏற்கனவே அமேசான் நிறுவனம் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ரோபோட்களை களமிறக்கி பணிகளை தொடங்கிவிட்டது. இதன் வாயிலாக 2027ம் ஆண்டுக்குள் சுமார் 1,70,000 பேரை பணியில் எடுக்கும் செயல்களை மிச்சப்படுத்தி இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் செயல்முறையை அமேசான் தவிர்க்கவுள்ளது. இதனால் 10 லட்சம் பேர் வேலை கிடைக்காமல் அல்லது பிற வேலைகளை நோக்கி கவனம் செலுத்தவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் ஏஐ பயன்பாடுகளை ஊக்குவித்து வருவதால், இழப்புகள் வரும் காலங்களில் மனிதர்களுக்கு ஏராளம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தனது முன்னேற்றத்தை அதிகரிக்க தொழில்நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கும், அமேசானின் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு ஏஐ மற்றும் தொழில்நுட்பம் அனைத்து பணிகளையும் செய்யும். மனித உழைப்பு என்பது குறையும் என தெரிவித்துள்ளார். அதாவது, "ஏஐ மற்றும் ரோபோட் அனைத்து பணிகளையும் செய்யும் என்பதால், உங்களின் வேலைக்கு ஏஐ நியமனம் செய்யப்படும். காய்கறிகளை நீங்கள் விளைவித்து பயன்படுவது மற்றும் அதனை சந்தையில் வாங்குவதுபோன்ற நிலையை இணைத்த சங்கிலி பிணைப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
அமேசான் விவகாரம் குறித்து எலான் மஸ்க் பதிவு:
AI and robots will replace all jobs.
Working will be optional, like growing your own vegetables, instead of buying them from the store.
— Elon Musk (@elonmusk) October 21, 2025