Students Drowned into Sea: கடலில் உற்சாக குளியல்; திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவர் பலி., 2 பேர் மாயம்.!
இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து துயரங்கள் நடந்துள்ளது.
ஜூன் 22, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பப்படலா மாவட்டம், ராமாபுரம் (Ramapuram Beach) கடற்கரை பகுதி அங்கு பிரபலமான இடமாக இருக்கிறது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் அங்கு பலரும் சுற்றுலா வந்து செல்வார்கள். குடும்பத்துடன், நண்பர்களுடன் கடற்கரைக்கு வரும் பலரும், நீரில் இறங்கி விளையாடி மகிழுவார்கள். ராமாபுரம் கடற்கரை பகுதி ஆபத்து கொண்ட நீரோட்டம் நிறைந்த பகுதி என்பதால், சிலநேரம் நீரில் குளிப்பவர்கள் கடலுடன் இழுத்து செல்லப்படும் துயரமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
11 பேரில் 2 பேர் பலி., 2 பேர் மாயம்:
இந்நிலையில், அங்குள்ள மேற்கு கோதாவரி மாவட்டம் துகிராளா பகுதியை சேர்ந்த மாணவர்கள் கொடிகாலா தேஜா (17), பாலா கிஷோர் (18), சக்கமனு நிதின் (19), கொரு அமலராஜு (20) உட்பட 11 பேர் கடற்கரைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். உற்சாகமாக அனைவரும் கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென ராட்சத அலை ஒன்று இவர்களை இழுத்து சென்றுள்ளது. Fish Eating Snakes: மீன்களை பிடித்து ருசித்து சாப்பிடும் பாம்புகள்; அருவியில் நடந்த ஆச்சரியம்.. வைரல் வீடியோ உள்ளே.!
குடுமப்த்தினர், நண்பர்கள் கண்ணீர் சோகம்:
மொத்தம் உள்ள 11 பேரில் மேற்கூறிய நால்வரில் தேஜா மற்றும் பாலா ஆகியோரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய இருவரின் உடல்கள் தேடப்படுகின்றன. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் உற்சாகமாக குளிக்க வந்தவர்கள், ராட்சத அலையில் சிக்கி பலியான சோகம் அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பலியான தங்களது பிள்ளையின் உடலை கட்டியணைத்து பெற்றோர் கதறியது காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியது.