Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
சாலை சந்திப்புகளில் கவனமாக செல்லாத பட்சத்தில், நொடியில் விபத்துகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் உயிரிழப்புகளாய் நடந்துள்ளது. அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டியின் உயிர் நொடியில் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 24, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் (Ahmedabad) மாவட்டம், புலாபாய் பார்க் சாலையில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி காலை 10:30 மணியளவில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக (Bus Rammed into Two Wheeler Rider Died) உயிரிழந்தார். ஆனால், விபத்து ஏற்பட்டதும் வாகனத்தை நிறுத்தாத அரசு பேருந்து ஓட்டுனர், அங்கிருந்து தப்பி சென்றார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து வாகன ஓட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Love Couple Suicide: அண்ணா-தங்கை உறவில் மலர்ந்த காதல்; பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்.!
ஓட்டுநர் கைது & உடனடி அபாரதத்திற்கு உத்தரவு: விசாரணையைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அமர்வாத் போக்குவரத்து (Amdavad Municipal Transport Services AMTS) கழகத்தில் பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே விபத்தின் சிசிடிவி (Accident CCTV Footage) வீடியோ காட்சிகள், அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஓட்டுனருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பெற்றது. இதனையடுத்து, போக்குவரத்து கழகம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, ஓட்டுனரை உடனடியாக பணிநீக்கம் செய்தது. பின் காவல் துறையினர் ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியில் ரூ.2 இலட்சத்தை ஓட்டுனரிடம் இருந்து வசூலித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாததால் உடனடியாக பறிபோன உயிர்: விபத்தில் உயிரிழந்த நவீன் படேல் (வயது 53), பேருந்து வருவதை கண்டு பிரேக் பிடிக்க முயற்சித்தும் பலனின்றி விபத்து அடைந்தது சிசிடிவி காட்சிகளின் வழியே உறுதியாகியுள்ளது. அவர் இருசக்கர வாகன பயணத்தின் போது தலைக்கவசம் அணியாதது உயிரிழப்புக்கு நேரடியாக வழிவகை செய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)