Farmer Suicide: கடன் தொல்லையால் விவசாயி விபரீதம்; தோட்டத்திலேயே தூக்கிட்டு தற்கொலை.!

அறுவடை பணிகளுக்காக நெற்பயிர்களை தயார் செய்ய விவசாயி ஆழ்துளை கிணறு அமைக்க இலட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவழித்தும் பலனின்றி, இறுதியில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

Died Farmer | Rope Suicide (Photo Credit: @TeluguScribe X / Pixabay)

ஜனவரி 29, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டம் (Kamareddy Farmer Suicide), தோமகொண்டா, முட்யமபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் பொப்பிலி துர்கய்யா. இவர் விவசாயியாக பணியற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்கிறார். விவசாய நிலத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ஆழ்துளை கிணறு தோண்டி இருக்கிறார். இவரின் நிலத்தில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், அவை அடுத்தடுத்து பழுதடைந்து இருக்கின்றன. சாகுபடி மற்றும் கிணறு அமைக்க என விவசாய பணிகளுக்கு தனியாரிடம் ரூ.3.50 இலட்சம் கடனும் வாங்கி இருக்கிறார்.

விரக்தியடைந்த விவசாயி: இதனால் கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப செலுத்தக்கூறி கேட்டு வந்துள்ளனர். விவசாய அறுவடை பணிகளும் செய்ய இயலாமல் அவதிப்பட்ட துர்கய்யா, விரக்தியின் உச்சத்திற்கு சென்று கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டு இருக்கிறார். Ulundurpet Accident: பேருந்து - லாரிக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய கார்; 2 பெண்கள் பலி., 51 பேர் படுகாயம்.! 

Suicide File Pic (Photo Credit: Pixabay)

தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை: இந்நிலையில், ஒருகட்டத்தில் வாழ்க்கையின் விரக்திக்கு சென்ற விவசாயி துர்கய்யா, மனமுடைந்து தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தோட்டத்திற்கு சென்றவரை சடலமாக மரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் கண்ணீர்: தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் விவசாயியின் மறைவால் கண்ணீரில் தவிக்கின்றனர்.