82-Year-Old Woman Dies: வீட்டில் உறங்கிய 82 வயது மூதாட்டியை கடித்துகுதறிய நாய்கள்; துள்ளத்துடிக்க பரிதாப பலி..!
குடிசையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை தெருநாய்கள் கடித்துக்குதறி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 03, கரீம்நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், முஸ்தாபாத் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 82 வயது மூதாட்டி, தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கும் நிலையில், அவர் திருமணம் முடிந்து தனது குடும்பத்துடன் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவில் மூதாட்டி தனது குடிசையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி அயர்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவரை சுத்துப்போட்ட தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி கொலை செய்துள்ளது. மறுநாள் காலையில் மூதாட்டியின் உடல் பாகத்தை சாப்பிட்ட நாய் ஒன்று, பொதுமக்கள் முன்னிலையில் உடல் சதையை வாந்தி எடுத்துள்ளது. Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
காவல்துறையினர் விசாரணை:
இதனைகவனித்து அதிர்ச்சியடைந்த மக்கள் செய்வதறியாது திகைக்க, மூதாட்டியின் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது மூதாட்டி நாய் கடித்து பலியானது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூதாட்டியின் உடலை மீட்டு சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகரில் சுற்றித்திரியும் நாய்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள பொதுமக்கள், சர்ச்சைக்குரிய நாயையும் ஆத்திரத்தில் அடித்துக்கொன்றதாக தெரியவருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)