ஆகஸ்ட் 02, புனே(Maharashtra News): புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி கிரிஜா ஷிண்டே (3) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென சிறுமியின் மேல் விழுகிறது. அதனைப் பார்த்து பயந்த சிறுவர்கள், பெற்றோர்களை அழைத்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் பதறிப் போகும் வகையில், இந்தக் காட்சி உள்ளது. மேலும் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். Viral Video: சுறுசுறுப்பான எறும்புக்கு சரக்கை ஊற்றி மட்டையாக்க நினைத்த இளைஞன்.. வைரலாகும் வீடியோ..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)