Deepfake Video Fraud Investment: முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோவை பயன்படுத்தி ரூ.7 லட்சம் மோசடி; மர்ம கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு..!

மும்பையில் முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோ மூலம் முதலீடு செய்ய சொல்லி, ரூ.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Mukesh Ambani | Cyber Crime File Pic (Photo Credit: Wikipedia | Pixabay)

ஜூன் 21, மும்பை (Maharashtra News): இந்தியாவில் நாளுக்குநாள் புதிய மோசடி முறைகள் உருவாகி வருகின்றன. நாட்டின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோவை (Deepfake Video) பயன்படுத்தி, ரூ.7 லட்சம் மோசடி செய்த விவகாரம் தற்போது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஓஷிவாரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவலின்படி, முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) வீடியோவை பயன்படுத்தி, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் மறு உருவாக்கம் செய்துள்ளனர். மேலும், 'ராஜீவ் சர்மா டிரேட் குரூப்' என்ற நிறுவனத்தில், பிசிஎஃப்-யில் முதலீடு செய்ய சொல்லி, முதலீட்டின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என முகேஷ் அம்பானி பேசுவதுபோல, வீடியோ பகிரப்பட்டு வருகிறது. Apple iPhone 14 Plus Offer Sale: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகையுடன் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!

இதற்கு முன்னதாக மார்ச் மாதத்தில், இதேபோன்ற முதலீடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. டாக்டர் கே.கே.பாட்டீல், கடந்த மே 28- ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை, அதிக வருமானம் தருகிறோம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 16 வெவ்வேறு கணக்குகளுக்கு ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றார். இதனால், ஓஷிவாரா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அடையாளம் தெரியாத நபர் மீது ஐடி சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.