Bus Crash: பேருந்து விபத்தில் சிக்கி கோர விபத்து; 15 பேர் பலி., 16 பேர் படுகாயம்.!
மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
செப்டம்பர் 07, ஹத்ராஸ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஆக்ரா - அலிகார்க் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில், கன்வார்பூர் கிராமத்தில் விபத்து நடந்து இருக்கிறது. வேன் - பேருந்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. விபத்தில் சிக்கிய வாகனத்தில் பயணித்த 7 ஆண்கள், 4 பெண்கள், 4 குழந்தைகள் என 15 பேர் பலியாகி இருக்கின்றனர். Drunken Teacher Cut Girl's Hair: குடிபோதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.. வீடியோ வைரல்..!
முதல்வர், குடியரசுத்தலைவர் இரங்கல்:
ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி பேருந்து பயணித்தபோது இந்த விபத்து நடந்து இருக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், உயிரிழந்தோருக்கு ரூ.2 இலட்சம் நிதியுதவியும், காயமடைந்தோருக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற வேண்டுவதாக தெரிவித்து இருக்கிறார்.
விபத்தின் களநிலவரக்காட்சிகள்: