செப்டம்பர் 06, ரத்லாம் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் (Ratlam) மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் தினமான நேற்றைய தினம் (செப்டம்பர் 05) குடிபோதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செமல்கெடியில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் (Teacher) ஒருவர், பள்ளி சிறுமியின் தலைமுடியை வெட்டி, பின்னர் கிராமவாசி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். Actor Darshan Case: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை கொலை; நடிகரின் தீவிர ரசிகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

அப்போது, ஆசிரியர் அவரிடம் "நீங்கள் வீடியோவை எடுக்கலாம், ஆனால் யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது" என கூறியுள்ளார். பரவலாக பகிரப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, வீடியோவை பார்த்த பழங்குடியினர் துறையின் உதவி ஆணையர் ரஞ்சனா சிங், ஆசிரியர் வீர் சிங்கை உடனடியாக இடைநீக்கம் (Suspended) செய்ய உத்தரவிட்டார்.

 சிறுமியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)