Children Tied with Rope: மாங்காய் திருடியதற்காக இப்படியா? 3 சிறார்களை கட்டிவைத்து துன்புறுத்திய தோட்ட உரிமையாளர் கைது.!
தோட்டத்தின் உரிமையாளர் 3 சிறார்களை கட்டிவைத்து தாக்கி துன்புறுத்திய வீடியோ வெளியாகிய நிலையில், காவல்துறையினர் உரிமையாளரை கைது செய்தனர்.
ஜூலை 12, மஹாராஜகஞ்ச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹாராஜகன்ச் பகுதியை சேர்ந்த சிறார்கள் மூவர், அங்குள்ள தோட்டம் ஒன்றுக்கு சென்றுள்ளார். தோட்டத்தின் உரிமையாளர் சுதர்சன், சிறார்கள் மாம்பழம் திருடுவதை கண்டுள்ளார். இதனையடுத்து, அவர்களை பிடித்த சுதர்சன், மூவரையும் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி இருக்கிறார். Father Sells Newborn Daughter: பிறந்து 18 நாட்களேயான குழந்தையை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை; 24 மணிநேரத்தில் அதிரடி காண்பித்த காவல்துறை.!
வாயில் மாங்காயை திணித்து வைத்து கொடுமை:
மேலும், அவர்கள் கத்தி கூச்சலிட கூடாது என்பதற்காக, வாயில் மாங்காயை திணித்து கொடுமை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நிலத்தின் உரிமையாளருக்கு எதிரான கண்டனத்தை குவித்து வருகிறது.
90 கிட்ஸ்-களின் வலி:
கடந்த தலைமுறையில் குழந்தைகளாக இருந்த பலரும் மாம்பழம் உட்பட தோட்டத்தில் உள்ள பழங்களை திருடி சாப்பிடச் சென்று, தோட்டத்து உரிமையாளரிடம் தென்னை மட்டையால் அடிவாங்கியது முதல், நாயால் துரத்தப்பட்டது வரை பல துயரங்களை கண்டு இருந்தனர். ஆனால், இன்றளவில் அவை வீடியோ கேமிரா இருப்பதால், பல உரிமையாளர்களுக்கு ஆப்படிக்கவும் வசதியாக இருக்கிறது.
சிறார்கள் துடிக்கும் வீடியோ: