Lover Refuses Marriage: காதலர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆவேசம்: செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்.!
நண்பர் தன்னை திருமணம் செய்ய மறுத்து வந்ததால், பெண்மணி செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக போராட்டம் நடத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 24, மஹாராஜ்கஞ்ச் (Uttar Pradesh News): தனது காதலர் உள்ளூரில் இருக்கிறாரா? என்பது கூட தெரியாமல், பெண்மணி ஆவேசப்பட்டு செய்த காரியம், இறுதியில் அவருக்கு எதிராகவே திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. அந்த தகவலை அறிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹாராஜ்கஞ்ச் (Maharajganj, Uttar Pradesh) மாவட்டம், செம்ரா ராஜா கிராமத்தில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் 24 வயதுடைய இளைஞரும் வசித்து வருகிறார். இவர் கனரக லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்த நிலையில், இருவரும் காதலித்து வந்ததாகவும் கூர்பாடுகிறது. ஆனால், திருமணத்திற்கு ஆண் ன்மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதல் வயப்பட்ட பெண்மணி, காதலனின் முடிவை எண்ணி வருந்தியுள்ளார்.
பலமுறை தன்னை திருமண செய்யக்கூறி வற்புறுத்தியும் பலன் இல்லை. இதனால் சம்பவத்தன்று தனது கிராமத்தில் உள்ள மொபைல் கோபுரத்திற்கு சென்றவர், 50 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரின் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தினார். Woman Removes Pant in Front of Passengers: விமான பயணத்தில் பயணிகளை பதறவைத்த பெண் பயணி: சிறுநீர் கழிக்கப்போவதாக பேண்டை அவிழ்த்து பகீர் செயல்.!
தகவல் அறிந்து காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இளைஞர் உடனடியாக வந்து தனது திருமணத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பெண் கோரிக்கை வைக்க, விசாரணையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேபாளத்திற்கு லாரியை இயக்கி பணிக்காக சென்றது தெரியவந்தது.
பெண்மணியிடம் அதிகாரிகள் விபரத்தை தெரிவித்தும் பலன் இல்லை. இதனிடையே விபரம் உள்ளூரில் பரவி, அனைவரும் சம்பவ இடத்தில குவிந்தனர். இதுகுறித்த வீடியோவையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
சிலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் பெண்மணி பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டார். ஆனால், அவரின் கோபம் குறையவில்லை. அதிகாரிகள் அவரிடம் சமாதானம் பேசி, தங்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளனவா? எனவும் ஆலோசித்து வருகின்றனர்.