INDIA GENERAL ELECTION RESULTS 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. வெற்றிவாகை சூடபோவது யார்?..!
உலகமே உற்றுநோக்கும் தேர்தல் முடிவுகளை காண லேட்டஸ்ட்லி தமிழுடன் இணைந்திருங்கள்.
ஜூன் 04, சென்னை (Chennai): கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய இந்தியா தேர்தல்கள் 2024, ஜூன் 01ம் தேதி வரை ஏழுகட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. உலகமே உற்றுநோக்கிய மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 04ம் தேதியான இன்று ஒரேகட்டமாக அறிவிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கைக்கு இந்திய அளவில் தேர்தல் அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.
14 சுற்று வாக்கு எண்ணிக்கை: முதலில் தபால் வாக்குகளே எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும். மொத்தம் 14 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இறுதிக்கட்டத்தில் இழுபறியுடன் செல்லும் சூழல் உண்டாகினால், வேட்பாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் வாக்கு எண்ணிக்கை முதலில் இருந்து நடைபெறும். Kedar Jadhav Retirement: அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வை அறிவித்த கேதர் ஜாதவ்.. ரசிகர்கள் சோகம்..!
அதிகாரிகள், முகவர்களுக்கு கட்டுப்பாடு: வாக்குச்சாவடி மையத்தில் அரசியல்கட்சி நிபுணர்கள் தங்களது கட்சியின் சார்பில் சேகரிக்கப்பட்ட வாக்குகளை குறித்து வைக்க காகிதம், பென்சில் போன்றவை மட்டும் எடுத்து செல்லப்பட அனுமதி வழங்கப்படும். அதேபோல, செல்போன் உட்பட எந்த ஸ்மார்ட் பொருட்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதி இல்லை.
66.33% வாக்குகளும் எண்ணப்படுகிறது: பலத்த காவல்துறை பாதுகாப்புடன், சிசிடிவி கேமிரா கண்காணிப்புடன் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைக்க 272 தொகுதிகள் தேவைப்படும். எந்த கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்த கட்சி மத்தியில் ஆட்சியை அமைக்கும். இந்த தேர்தலில் மொத்தமாக 66.33% மக்கள் தேசிய அளவில் வாக்களித்து இருந்தனர். 8,360 வேட்பாளர்கள் மக்களின் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
தேர்தல் முடிவுக்காக காத்திருப்பு: தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிகளில் அமரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இன்றைய நாளே அடுத்த 5 ஆண்டுகளுக்கான இறுதி தீர்ப்பை வழங்கும் நாள் என்பதால், பலரும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிடின்றனர்.