Fact Check: கோடையில் பெட்ரோல் டேங்க் நிறைந்திருந்தால் வாகனம் வெடிக்குமா?.. விளக்கம் கொடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம்.!
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல சாராம்சங்கள் பொருத்தியே வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதால், வாகனத்தின் வெயிலின் தன்மை குறித்து கவலைகொள்ள வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25, புது டெல்லி (Fact Check): சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த நாட்களில் இருந்து, அதன் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒருபுறம் மக்களுக்கு அவசியமான கருத்துக்கள் தெரியவந்தால், மறுபுறம் போலியான மற்றும் மக்களை பீதியாக்கும் நிகழ்வுகளுக்கு பஞ்சம் இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் இந்திய ஆயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகியது. அந்த பதிவில், கோடை காலங்களின் வெயிலின் தாக்கம் காரணமாக எரிபொருள் நிரப்பும் தொட்டி சூடாகி, அதனுள் நீங்கள் முழுவதும் பெட்ரோலை நிரப்பினால் வாகனம் வெடிக்கும் என கூறப்பட்டதாக பதிவு வைரலானது. Operation Kaveri: சூடான் இராணுவம் – துணை இராணுவம் மோதல் எதிரொலி; தாயகம் திரும்பும் 178 இந்தியர்கள்..!
இந்த பதிவுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியன் ஆயில் நிறுவனம், தாங்கள் ஏதும் இவ்வகையான அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், வாகனங்கள் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் இயங்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால், அவை வெடிக்காது. அவை குறித்த அச்சம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.