Union Budget 2024: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது 2024 - 2025 பட்ஜெட்; அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் இதோ.!

அதன் விபரங்கள் ஒரே செய்தியாக உங்களின் வசதிக்காக லேட்டஸ்ட்லி தமிழ் சார்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

Union Budget 2024 (Photo Credit: Team LatestLY)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): 18 வது மக்களவையை, தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. தேர்தலுக்கு பின்னர் மக்களவையில் ஜூலை 23ம் தேதியான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 2025 (Union Budget Session 2024 - 2025 Live Updates) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 7 வது முறை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் முழு அளவிலான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் இந்தியாவே எதிர்பார்த்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சகர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) பேசியது மற்றும் அறிவிப்புகள் பின்வருமாறு.,

பணவீக்கம் குறையும்:

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசை தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்ததற்கு நன்றி. இந்திய மக்கள் அரசின் கொள்கை மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். நித்திய பொருளாதார வளர்ச்சி உலகளவில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் வகையில் நீடிக்கிறது, அது இனியும் தொடரும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை முன்னிறுத்தி அரசின் கொள்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய மக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடு இன்றி இருக்கின்றனர். அவர்களுக்காக பிரதமர் உழைத்து வருகிறார். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடித்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கிறது. பிரதமரின் இலவச உணவு தானிய திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்தியாவின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவின் பணவீக்கம் குறைந்து 4% என்ற நிலையில் சரிவை சந்திக்கும். வரும் 5 ஆண்டுகளில் 4.1 கோடி நபர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடுகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இளைஞர்களின் நலனுக்கு 5 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். Gold Silver Tax: சுங்க வரி குறைப்பு; 'குறைகிறது தங்கம்-வெள்ளி விலை' பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.! 

வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி:

வரும் 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெரும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் பயிற்சிகள் பாதிக்கப்படாத வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தி அதிகரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அமல்படுத்த மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்துறைக்காக ரூ.1.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடக்கவிலையை காட்டிலும் 20 % இலாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். பருவநிலையை தாக்குப்பிடித்து வளர்ச்சியடையும் தன்மை கொண்ட 102 வகையிலான பயிர்கள் அறிமுகம் செய்யப்படும்.

ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள்: 

மாணவர்களின் உயர்கல்விக்காக (Eduation Loan) ரூ.10 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். வேலைபார்த்து வரும் பெண்களுக்காக புதிய தங்கும்விடுதிகள் அமைக்கப்படும். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைக்காக 3 திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும். முதல் திட்டத்தின்கீழ் முதல் முறையாக வேலையில் சேரும் நபர்களுக்கு ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும். 20 இலட்சம் இளைஞர்களுக்கு பணித்திறன் உருவாக்கும் வகையில் நாட்டில் 1000 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் ஒருஇலட்சம் மாணவர்களுக்கான கல்விக்கடன் வட்டி ரத்து செய்யப்படும். பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள் உருவாக்கப்படும். பீகாரில் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆந்திராவின் மறுசீரமைப்பு திட்டத்துக்கு, அமராவதியை தலைநகராக மாற்ற ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பீகார் & ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு:

அனைவருக்குக்கும் வீடு திட்டத்தில், பிரதமரின் வீடு திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்படும். பீகாரில் ரூ.26 ஆயிரம் கோடி செலவில் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். சென்னை - ஹைதராபாத் - விசாகப்பட்டினம், ஹைதராபாத் - பெங்களூர் தொழில்வழித்தடம் மேம்படுத்தப்படும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி வரை கடன் உத்திரவாதம் வழங்கப்படும். ஊரக மேம்பாடு திட்டங்களுக்கு ரூ.2.66 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு,குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு கடன் உறுதி திட்டமானது அறிமுகம் செய்யப்படுகிறது. Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!

சாலைகள் இணைப்புத்திட்டத்துக்கு ரூ.26,000 கோடி:

முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.3 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உணவுத்தரத்தை பரிசோதிக்க நாட்டில் 100 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் 12 புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். அரசு, தனியார் பங்களிப்புடன் தொழிலாளர்கள் தங்க வாடகை விடுதிகள் அமைத்துத்தரப்படும். அரசு - தனியார் பங்களிப்புடன் இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும். முன்னணியில் இருக்கும் 500 நிறுவனங்களில் சுமார் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையுடன் இன்டெர்ஷிப் பயிற்சி வழங்கப்படும். உள்நாட்டில் இருக்கும் தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையிலான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். புதிய சாலைகள் இணைப்புத்திட்டத்தை மேம்படுத்த 26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திவாலான நிதிநிறுனவத்திடம் இருந்து மக்களின் பணத்தை பெற்றுத்தரவுதற்கு ஆணையம் அமைக்கப்படும். மாநில அரசு மற்றும் வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் ஏற்படுத்தப்படும்.

பீகார் மாநிலத்தில் ரூ.21400 கோடி செலவில் மின் உற்பத்தி ஆலைகள்:

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதால் மின் செலவை குறைக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க 1.28 விண்ணப்பங்கள் பெறப்பட்டால், திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்படும். இதன் வாயிலாக மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை சோலார் பேனல்கள் வாயிலாக பெறலாம். சிறிய அளவிலான நியூக்ளியர் மின்சார உற்பத்தி மையங்கள் அமைக்க ஆலோசிக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியில் 3.4 % உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.11 .1 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில அரசுடன் இணைந்து பல நகரங்களை வளர்ச்சிப்படுத்து மையமாக மத்திய அரசு இருக்கும். பீகார் மாநிலத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.11500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் வங்கிகளை 24 இடங்களில் கூடுதலாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கரில் 2400 மெகா வாட் மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.21400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 25000 ஊரக பகுதிகளை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மாநில அரசுகளுக்கு வட்டியில்லாத கடன்:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அசாம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மறுகட்டமைப்பு வசதிக்காக சிறப்பு நிதி வழங்கப்படும். பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, மாநில அரசுகளுக்கு நீண்டகால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த 11500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியா உலகில் தலைசிறந்த சுற்றுலா மையமாக செயல்பட வழிவகை செய்யப்படும். வெளிநாட்டு பணபரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.9 ல் இருந்து 4.5 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க விதிகள் எளிமையாக்கப்படும். 3 புற்றுநோய் மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் மீதான வரிகள் நீக்கப்படுகிறது. தொழில் தொடங்குவதை எளிதாக மாற்ற ஜன்விஷிவாஸ் 2.0 திட்டம் மசோதா அறிமுகம் செய்யப்படும். Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!

தங்கம் & வெள்ளி வரி (Gold Silver Tax):

செல்போன், சார்ஜர் மீதான உற்பத்தி வரி 15% குறைக்கப்படும். இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். மேலும், செல்போன் உதிரி பாகங்களின் விளையும் குறையும். நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ.32.07 இலட்சம் கோடியாக இருக்கும். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரி 6% குறைக்கப்படும். பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 6.4 % குறைக்கப்படுகிறது. சுற்றுசூழலை பாதிக்கும் வகையிலான பிளாஸ்டிக் மீதான வரி 25 % அதிகரித்துள்ளது. அறக்கட்டளைக்கு இதுவரை நடைமுறையில் இருந்த 2 வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே வரிமுறை அறிமுகம் செய்யப்படும். வருமானவரியை செலுத்தும் நபர்களில் 3 ல் 2 பங்குள்ள நபர்கள் புதிய நடைமுறைக்கு மாறி இருக்கிறார்கள்.ஆன்லைன் வர்த்தகத்திற்கான வரி குறைக்கப்படும். தாமதமாக இனி வருமானவரி தாக்கல் செய்தால், அது குற்றமாக கருதப்படாது. சில முதலீடுகளுக்கு 20 % குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். நேரடி வரிவிதிப்பு எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுகிறது. அந்நிய முதலீடுகள் ஈர்க்க கார்ப்பரேட் நிறுவனத்திற்கான வரி 40 % ல் இருந்து 35 % ஆக குறைக்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு (New Tax Regime):

புதிய வருமான வரியின் கீழ் நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 உயர்த்தப்படுகிறது. தனிநபருக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு (Standard Deduction) ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு செய்யப்படுகிறது. புதிய வருமான வரியின் கீழ் ரூ.3 இலட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி இல்லை. ரூ.3 இலட்சம் முதல் ரூ.7 இலட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.10 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை 15 % வரி, ரூ.15 இலட்சம் மற்றும் அதற்கும் மேல் வருமானம் பெறுவோருக்கு 30 % வரி பிடித்தம் செய்யப்படும்.