Nirmala Sitaraman (Photo Credit: @ANI X)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை22 தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை.23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் . 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அதேநேரம் தொடர்ந்து 7வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்கிற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றார். இதற்கு முன் மொராஜி தேசாய் தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத் தொடரில் 2023 -24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!

வேலைவாய்ப்பு: மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ.10 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். வேலைபார்த்து வரும் பெண்களுக்காக புதிய தங்கும்விடுதிகள் அமைக்கப்படும். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைக்காக 3 திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். மேலும் முதல் திட்டத்தின்கீழ் முதல் முறையாக வேலையில் சேரும் நபர்களுக்கு ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும். 20 இலட்சம் இளைஞர்களுக்கு பணித்திறன் உருவாக்கும் வகையில் நாட்டில் 1000 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் ஒரு இலட்சம் மாணவர்களுக்கான கல்விக்கடன் வட்டி ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பீகார் & ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் (Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh) ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள் உருவாக்கப்படும். பீகாரில் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆந்திராவின் மறுசீரமைப்பு திட்டத்துக்கு, அமராவதியை தலைநகராக மாற்ற ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைவருக்குக்கும் வீடு திட்டத்தில், பிரதமரின் வீடு திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!

பீகாரில் ரூ.26 ஆயிரம் கோடி செலவில் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். சென்னை - ஹைதராபாத் - விசாகப்பட்டினம், ஹைதராபாத் - பெங்களூர் தொழில்வழித்தடம் மேம்படுத்தப்படும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி வரை கடன் உத்திரவாதம் வழங்கப்படும். ஊரக மேம்பாடு திட்டங்களுக்கு ரூ.2.66 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு,குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு கடன் உறுதி திட்டமானது அறிமுகம் செய்யப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.