ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை22 தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை.23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, முத்ரா கடன் (Mudra loan) வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.3 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சி மற்றும் புதுமைகளைத் தூண்டுவதற்கு தேவையான நிதி உதவியை அவர்களுக்கு வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். முத்ரா கடன் திட்டம் கார்ப்பரேட் அல்லாத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!
மேலும் உணவுத்தரத்தை பரிசோதிக்க நாட்டில் 100 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் 12 புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். அரசு, தனியார் பங்களிப்புடன் தொழிலாளர்கள் தங்க வாடகை விடுதிகள் அமைத்துத்தரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். அரசு - தனியார் பங்களிப்புடன் இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும். முன்னணியில் இருக்கும் 500 நிறுவனங்களில் சுமார் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையுடன் இன்டெர்ஷிப் பயிற்சி வழங்கப்படும். உள்நாட்டில் இருக்கும் தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையிலான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். புதிய சாலைகள் இணைப்புத்திட்டத்தை மேம்படுத்த 26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திவாலான நிதிநிறுனவத்திடம் இருந்து மக்களின் பணத்தை பெற்றுத்தரவுதற்கு ஆணையம் அமைக்கப்படும். மாநில அரசு மற்றும் வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் ஏற்படுத்தப்படும் என்று சீதாராமன் தெரிவித்தார்.
#WATCH | Finance Minister Nirmala Sitharaman presents the Union Budget 2024-25 in Lok Sabha. pic.twitter.com/TPWpZqB0O9
— ANI (@ANI) July 23, 2024