J&K and Haryana Assembly Election Date 2024: ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

Election Commission of India & Voters (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 16, புதுடெல்லி (New Delhi): இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதிகள் (J&K and Haryana Assembly Election Date) அறிவிக்கப்பட்டன. யூனியன் பிரதேசமான ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீக் குமார் தெரிவித்தள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்றது. மேலும் மாநிலத்தில் சுமார் 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. Young Girl Gang Rape: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்.. 5 பேர் கைது..!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: ஹரியானாவிற்கு (Haryana) அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திற்கு 90 சட்டமன்றத் தேர்தல் தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அக்டோபர் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.