Rape File pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, பிஜ்னோர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் (Bijnor) மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், கடந்த ஆகஸ்ட் 09-ஆம் தேதி அன்றிரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் இளம்பெண்ணை மிரட்டி, அவரது வீட்டிலிருந்து கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். மேலும், இதனை அவர்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பெண் பத்திரிகையாளரிடம் தகாத பேச்சு; 2 பேர் அதிரடி கைது..!

இதனையடுத்து, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திடுவோம் என அந்த கும்பல் மிரட்டி வந்துள்ளது. இதனால், மனமுடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து முதலில் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட 5 பேரையும் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று கைது செய்தனர். மேலும், அவர்களிடன் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.