Rise In Cancer In India: இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. வெளியான பகீர் தகவல்..!
இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மே 27, புதுடெல்லி (New Delhi): இந்த நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான கொலைகார நோயாக மாறிவிட்டது. மேலும் முதல் முறை புற்றுநோய் (Cancer) பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வர பல வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட புற்றுநோயானது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ‘புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளை’ (Cancer Mukt Bharat Foundation) என்ற அரசு சாரா அமைப்பின் அறிக்கையில், "புற்றுநோய்க்கு ஆலோசனை பெற்றவா்களில் 20 சதவீதம் போ் 40 வயதுக்குள்பட்டோா் ஆவா். அவா்களில் 60% போ் ஆண்கள். 26% பேருக்கு தலை மற்றும் கழுத்தில் புற்றுநோயும், 16% பேருக்கு இரைப்பை புற்றுநோயும், 15% பேருக்கு மாா்பக புற்றுநோயும், 9% பேருக்கு ரத்த புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது. Israeli Strikes in Rafah: கட்டிடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் இராணுவம், டென்ட்டில் குடியிருந்த 35 பேர் பரிதாப பலி.!
மேலும், மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மீரட் ஆகிய பகுதியிலிருந்து அதிகமானோா் எங்களை தொடர்பு கொண்டனர். கடந்த மாா்ச் 1 முதல் மே 15 வரை சுமார் 1,368 போ் எங்கள் அமைப்பை தொடா்புகொண்டுள்ளனர். புற்றுநோய் சிகிச்சை குறித்து இலவச ஆலோசனை பெற 93555 20202 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம். இந்த எண் மூலம் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் இந்த நோயால் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் அப்பல்லோ மருத்துவமனையின் சமீபத்திய ஹெல்த் ஆஃப் தி நேஷன் 2024 அறிக்கையின்படி, 2025ல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் வழக்குகள் அதை "உலகின் புற்றுநோய் தலைநகராக" மாற்றியுள்ளதாகவும் ஆய்வு கூறியுள்ளது.