மே 27, டெல் அவிவ் (World News): கடந்த 2023 அக். மாதம் 7ம் தேதி பாலஸ்தீனியம் நாட்டை சேர்ந்த ஹமாஸ் குழுவினர், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலை (ISrael Palestine War) முன்னெடுத்தனர். இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேலிய எல்லைகளில் உள்ள நகரங்களில் தாக்குதலை நடத்தியதில் 1400 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அங்குள்ள பல நகரங்கள் வான்வழி தாக்குதலை சந்தித்தது. இதனையடுத்து, போரில் களமிறங்கிய இஸ்ரேல், தற்போது வரை பாலஸ்தீனியத்தின் பல நகரங்களை வான்வழி தாக்குதல் நடத்தி மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறது.
உலக நாடுகள் உதவி: தனது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரையில் எனது தாக்குதல் ஓயாது என்ற முனைப்புடன் போரில் களமிறங்கிய இஸ்ரேல், வரலாற்றில் பாலஸ்தீன் எழ இயலாத அளவு தாக்குதலை முன்னெடுக்கிறது. ஒருகட்டத்தில் தொடக்கத்தில் பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் குழுவுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்த உலக நாடுகள், அந்நாட்டில் ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. தற்போது வரையில் பாலஸ்தீனியத்தில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் (Palestine Death Toll) பலியாகி இருக்கின்றனர். Head Priest Murdered: ஆசி வழங்கிய குருவின் அதிர்ச்சி செயல்.. 56 வயது மடாதிபதியை கொன்ற 12 வயது சிறுவன்.. பகீர் காரணம் உள்ளே.!
ஐநா அறிவுறுத்தியும் நிறுத்தப்படாத போர்: அங்குள்ள பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பொதுமக்களில் ஒருதரப்பு நாட்டை விட்டு வெளியேறியும், மற்றொரு தரப்பில் நாட்டிற்குள்ளேயே ஐநா முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டும் வருகின்றனர். போரை நிறுத்த ஐநா மன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. உலக நாடுகள் நீதிமன்றம் போர் நிறுத்தம் தொடர்பான உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்கி வருவதால், மத்திய கிழக்கு நாடுகள் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
கட்டிடங்களை குறிவைத்து நடத்த தாக்குதல்: இந்நிலையில், ஐநா முகாம் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பதுங்கியிருக்கும் பாயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தெரியவரும் நிலையில், பாலத்தீனியத்தில் உள்ள ரபாக் பகுதியில் நடந்த தாக்குதலில் 35 பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், 12 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கட்டிடங்களை குறிவைத்து நடத்த தாக்குதலில், அதற்கு அருகே டென்ட் அமைத்து இருந்தவர்கள் பலியாகி இருக்கின்றனர். மருத்துவ குழுவினர் காயமடைந்த நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் கூடியிருந்த இடத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளது.