SEBI Bans Anil Ambani: அனில் அம்பானி, ரியலன்ஸ் நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய தடை - செபி அதிரடி.! முழு விபரம் உள்ளே.!
பங்குச்சந்தை முதலீட்டில் மோசடி செய்து வந்த அனில் அம்பானி மற்றும் அவரின் பல்வேறு நிறுவனங்களின் மீது புகார் எழுந்து, தற்போது செபி அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
ஆகஸ்ட் 23, புதுடெல்லி (New Delhi): இந்திய பங்குச்சந்தை விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஆணையமான செபி, தனது சட்டங்களுக்கு எதிராக செயல்படும் முதலீடுதாரர்களின் பங்குகள் முதலீடு உட்பட நிர்வாக விவகாரங்களை அவ்வப்போது கட்டுப்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனிடையே, அணில் அம்பானியின் நிறுவனங்கள், இந்திய பங்குசந்தையில் முதலீடு என்ற பெயரில் நிதிமோசடி செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விஷயம் குறித்து செபி விசாரணை நடத்தி வந்தது. Union Home Secretary: மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம்:
இதனிடையே, முறைகேடுகள் குறித்த குற்றசாட்டு உறுதியான காரணத்தால் அனில் அம்பானி மற்றும் அவர் சார்ந்த பல நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய செபி அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனில் அம்பானி இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள செபி, ரூ.25 கோடி அபராதம் விதித்து இருக்கிறது. அதேபோல, ரிலையன்ஸ் ஹாம் பைனான்ஸ் நிறுவனம் செய்த மோசடிக்கு 6 மாதம் தடையும், ரூ.6 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிற விபரங்கள் இதோ:
அமித் பாப்னா என்பவருக்கு ரூபாய் 27 கோடி, ரவீந்தர் சுதாகர் என்பவருக்கு ரூபாய் 26 கோடி, பிங்க்கேஸ் ஆர். ஷா என்பவருக்கு ரூ. 21 கோடி, ஆதார் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, இந்தியன் அக்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, பி மேனேஜ்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, ஏரியான் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, சிட்டி செக்யூரிட்டி பைனான்ஸ் சர்விஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, டீப் இண்டஸ்ட்ரியல் பினான்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, அசைலா டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, விநாயக் வென்டர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி, கேம்ஸ்சா இன்வெஸ்ட்மென்ட், மெடிபிஸ் பிரைவேட் லிமிடெட், ஹிர்மா பவர் லிமிடெட், துலிப் அட்வைசர் பிரைவேட் லிமிடெட், மோஹன்பிர் ஹை டெக் லிமிடேட், நெட்டிசன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், க்ரஸ்ட் லாஜிக்கேட்ஸ் எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் யூனிகான் என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்சியல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூபாய் 25 கோடி அபராதம் குறிக்கப்பட்டுள்ளது.
செபி அபராதம் விதித்ததற்கான ஆதாரம்:
28 முதலீடுகளுக்கு தடை விதித்தது செபி: