Slight Dip In Number Of Women In LS: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்.. பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு..!

18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Lok Sabha (Photo Credit: @Harsh_Eye X)

ஜூன் 6, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி, 18 வது மக்களவை அரசை (Lok Sabha) ஏற்க பாஜக தயாராகி வருகிறது. 235 தொகுதிகளில் கூட்டணியுடன் வெற்றி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய 37 தொகுதிகளை மாநில வாரியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை வைத்து கைப்பற்றவும் காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூன் 8-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்க இருக்கிறார். Hyderabad Car Accident Video: சாலைவிதியை மீறி வேகமாக போய் - தடம் புரண்டு அசிங்கப்பட்ட கார்.. வைரலாகும் வீடியோ..!

இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2019 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது. மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பாஜக அதிகபட்சமாக 69 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 41 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது. மேலும் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்முறை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் 30 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸின் 14, திரிணாமுல் காங்கிரஸின் 11, சமாஜ்வாடியின் 4, திமுகவின் 3, ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் எல்ஜேபியின் தலா ஒரு பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.