Jammu Kashmir Election Results 2024: ஜம்மு காஷ்மீரில் வெற்றிக்கொடியை நாட்டுகிறது காங்கிரஸ்? தொடர்ந்து முன்னிலை... விபரம் உள்ளே.!
இதனால் காங்கிரஸ் கட்சியின் தொடர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்டோபர் 08, புதுடெல்லி (New Delhi): ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில், மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. அக்.08ம் தேதியான இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக - காங்கிரஸ் (BJP Vs Congress) கட்சிகளிடையே கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதலாகவே முன்னணி நிலவரங்கள் தொடர்ந்து மாறி வந்த நிலையில், 10 மணிக்கு மேல் ஹரியானாவில் கள சூழல் என்பது பாஜகவுக்கு சாதகமானது. Haryana Election Results 2024: ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக? 50 தொகுதிகளில் முன்னிலை.!
ஹரியானாவில் பாஜக முன்னிலை:
அங்குள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, இண்டியா கூட்டணி 33 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 1 மணிக்கு மேல் தான் உண்மையான வெற்றி நிலவரம் தெரியவரும் என்பதால், அதுவரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. Assembly Election Results 2024: ஜம்மு காஷ்மீர் & ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யார் வசம்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பாகும் தேர்தல்களம்.. விபரம் உள்ளே.!
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் முன்னிலை:
அதேவேளையில், ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரையில் அறுதிப்பெரும்பான்மை பெற வேண்டிய இடங்களை தாண்டி இண்டியா கூட்டணி 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 24 தொகுதிகளிலும், ஜெ.கே.பி.டி.பி 4 தொகுதிகளிலும், எஞ்சியவை 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரை பொறுத்தமட்டில் அங்கு கருத்துக்கணிப்புகளின்படி, தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் உள்ளது என கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளின்படி அனைத்தும் பொய்யாகி இருக்கிறது.
மாறப்போகும் அரசியல் நிலவரம்:
எனினும் 12 முதல் 1 மணிக்கு மேல் முன்னிலையில் இருக்கும் கட்சிகளே ஆட்சியை பிடிக்கும் என்பதால், மதியம் வரை இரண்டு கட்சியினருக்கும் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளையில், பாஜக ஜம்முவில் ஆட்சியை காப்பாற்றினாலும், இல்லாவிட்டாலும் மாநில அந்தஸ்து பிரச்சனை காரணமாக, துணை நிலை ஆளுநர் வாயிலாக அம்மாநிலத்தை மத்திய அரசே நிர்வகிக்கும். கிட்டத்தட்ட பாண்டிச்சேரி மாநிலத்தின் நிலைபோல, அங்கும் மாநில அந்தஸ்து கோரி மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தேர்தலின் முடிவை பொறுத்து அதற்கான சாதக சூழல் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் ஆட்சியே ஜம்மு காஷ்மீரில் அமைந்தாலும், அந்த தோல்வி பாஜகவை பிரதானமாக பாதிக்காது எனினும், அவர்கள் அங்கு உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். மேலும், ஹரியானா தேர்தல் முடிவுகள் எதிர்வரும் பஞ்சாப், டெல்லி மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.