IPL Auction 2025 Live

Perfume IED Bomb in Jammu Kashmir: வாசனை திரவியத்தில் வெடிகுண்டை உருவாக்கி பயங்கரவாத தாக்குதல் - ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி பரபரப்பு தகவல்..!

கடந்த ஜனவரி 20ம் தேதி ஜம்முவில் நடைபெற்ற இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், பயங்கரவாதியிடம் இருந்து வாசனை திரவிய வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.

Perfume IED Recovered form Terrorist Arif | Jammu Kashmir DGP Dilbak Singh (Photo Credit: ANI)

 

பிப்ரவரி 02: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் (Jammu Kashmir) கொண்ட எண்ணத்தவரால் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இங்குள்ளவர்கள் பாகிஸ்தான் (Pakistan) பயங்கரவாதிகளோடு (Terrorist) தொடர்பு வைத்துக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 20ம் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் (Jan 20, 2023 Jammu Kashmir Bomb Blast) 9 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒரே நாளில் 2 இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அங்கு உஷார் நிலை அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கூறிய தாக்குதல்களில் தொடர்புடைய ஆரிப் (Terrorist Arif) என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு, புதிய முறையில் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

Perfume IED Bomb Recovered from Terrorist (Photo Credit: ANI)

இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குனர் தில்பக் சிங் (JK DGP Dilpak Singh) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "பாகிஸ்தான் தனது நாட்டிற்குள் பயங்கரவாதத்தை வளர்த்து, அதனால் பலரையும் கொன்று குவித்துள்ளது. அவர்களின் பயங்கரவாத செயல்களால் உலகளவில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். Train Detached in Bihar: ஓடிக்கொண்டும் இருக்கும்போதே நடுவழியில் இரண்டு துண்டாக பிரிந்த இரயில்.. பதறிப்போன பயணிகளுக்கு காத்திருந்த அதிஷ்டம்.!

ஜம்மு காஷ்மீரும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அவர்கள் (பாகிஸ்தான்) பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, அது ரீதியான பிரச்சனையை இங்கு ஏற்படுத்த பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 20 நடந்த இரட்டை தாக்குதலில் இரண்டும் 20 நிமிட இடைவெளியில் நடந்தது.

9 க்கும் மேற்பட்டோர் முதல் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆரிப் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அவன் கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தானிய பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டுள்ளார். நாங்கள் முதல் முறையாக வாசனை திரவிய ஐ.இ.டி வெடிகுண்டை (Perfume IEF Bomb) கண்டறிந்துள்ளோம்.

இதற்கு முன்பு வாசனை திரவிய புட்டிகளில் இருந்து வெடிகுண்டுகளை மீட்டது இல்லை. இதனை ஒருவர் திறக்க முயற்சித்தாலோ அல்லது அதில் உள்ள திரவியத்தை உபயோகம் செய்ய முயற்சித்தாலோ அது வெடிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என கூறினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 02:17 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).