Deputy Collector Dies By Suicide: கேரளாவில் துணை கலெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
கேரளாவில் துணை கலெக்டர் நவீன் பாபு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 15, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், கண்ணூர் (Kannur) மாவட்டத்தில் துணைக் கலெக்டராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு (Deputy Collector Naveen Babu). இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அவர் பணியில் அமர்வதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவிடை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், இன்று (அக்டோபர் 15) காலை நவீன் பாபு அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தூக்கில் தொங்கிய (Hanging Suicide) அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. பஞ்சாயத்து தலைவர் திவ்யா பேசியதால், மனமுடைந்த நவீன் பாபு தற்கொலை செய்து கொண்டதாக, காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.