Karnataka HC: குழந்தையை ஒப்படைக்காத வரை பெண்ணின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன தெரியுமா?..!

பிரிந்து வாழ்ந்த தம்பதியில் பெண் தனது குழந்தையை கொடுமை செய்ய, உண்மை ஆதாரத்துடன் நிரூபித்த கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க கர்நாடக நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Karnataka High Court (Photo Credit: Live Law)

ஜூன் 09, பெங்களூர் (Karnataka High Court): கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். தம்பதிகளின் அன்புக்கு அடையளமாக பெண் குழந்தை பிறந்த சூழலிலும், மனைவி விவகாரத்தை விரும்பியதால் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். பெண்ணுடன் 3 வயதில் இருந்து அவரின் பெண் குழந்தை வளர்ந்து வந்துள்ளது.

இதனிடையே, தற்போது குழந்தைக்கு 5 வயது ஆகும் சூழலில், தாயுடன் வசித்து வரும் குழந்தையை அன்னை துன்புறுத்துவதாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த குழந்தையின் தந்தை, நீதிமன்றத்தை நாடி தன்னிடம் மனைவி குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். Viral Video: தற்கொலை செய்ய இரயில் தண்டவாளத்தில் தலைவைத்த இளைஞர்.. நேரில் பார்த்த பெண் காவலர் அசத்தல் செயல்.!

இதற்காக நீதிமன்றத்தில் பல ஆவணங்களையும் அவர் தரப்பில் தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணை இன்று நீதிபதி அலோக் ஆராதே & ஆனந்த் ராம்நாத் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில், பெண்ணுக்கு எதிரான பல்வேறு சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

அவை அனைத்தும் நிரூபணம் செய்யப்பட்டதால், குழந்தையை அடுத்த 24 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் முன்னிலையில் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை அவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை அவரின் முதலாளி நிறுத்தி வைக்கவும் ஆணையிடப்பட்டது.