Karnataka Politics: நவம்பருக்குள் கர்நாடகாவில் அரசியல் மாற்றமா?.. குமாரசாமி பரபரப்பு பேட்டி.. நடக்கப்போவது என்ன?..!
இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி தேவைப்படலாம் என்பதால் வளர்ச்சி பணிகளை நினைத்து பார்க்க வேண்டாம் என குமாரசாமி கேட்டுக்கொண்டார்.
மே 19, சென்னபட்டனா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை (Karnataka Assembly Poll) தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களில் வெற்றி அடைந்து எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) JD (S) Party தேர்தலை சந்தித்த நிலையில், 19 இடங்களில் மட்டுமே வெற்றி அடைய முடிந்தது.
ஜனதா தளத்தின் குமாரசாமி ராம்நகர் (Ram Nagar) மாவட்டத்தில் உள்ள சென்னபட்டனா நகரில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் அவர் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்ததக என்ன வேண்டாம்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் என்ன நடைபெறும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய அரசியல் நிலவரம் குறித்து கவலை வேண்டாம். பாஜக கொள்ளையடித்த வழியிலேயே காங்கிரசும் கொள்ளையடிக்கும். புதிதாக எதுவும் நடக்காது. யாரை எங்கு தடுப்பது என்பது எனக்கு நன்கு தெரியும். Jharkhand IED Child Died: நக்சல்கள் வைத்த IED பாம் வெடித்து 10 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
நான் போராடுவதற்கு தயாராக உள்ளேன். யாரிடமும் உதவி கேட்கமாட்டேன். காங்கிரஸ் சார்பில் அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது எளிது கிடையாது. இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி முதல் 70 ஆயிரம் கோடி தேவைப்படும். அவர்களுக்கு எப்படி நிதி கிடைக்கும்?.
இவைகளுக்கு நிதி ஒதுக்கினால் சாலை, நீர்ப்பாசன உட்பட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள இயலும். இவ்வாறான வளர்ச்சியை காங்கிரஸ் எப்படி வழங்குகிறது என காணலாம். காங்கிரஸ் ஆட்சியில் பெரிய அளவிலான வளர்ச்சியை நினைத்து பார்க்க வேண்டாம். ஜனதா தளம் (எஸ்) 60 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்க வேண்டும்.
சிலரின் சதியால் நமக்கு வாக்கு கிடைக்கவேயில்லை. பாஜகவுடன் - ஜனதா தளம் கைகோர்க்கும் என சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள். பாஜக தலைவர்கள் நம்மை அழிக்க நினைத்தார்கள். எங்கள் குடும்பம் பல அதிர்ச்சியை தங்கியது. கடவுளின் அருளால் மக்களின் அருள் எங்களுக்கு கிடைத்தது. வெற்றியோ, தோல்வியோ மக்களுக்கே நலப்பணி. கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் வரும்" என பேசினார்.