Dog Killed Child: மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து கொன்ற தெருநாய்கள்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
வீடு வாசலில் நின்றுகொண்டு இருந்த மாற்றுத்திறன் சிறுவனை 300 மீட்டர் இழுத்து சென்ற தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக பலியாகினான்.
ஜூன் 12, கண்ணூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் (Kannur, Kerala), கெட்டினகாம் (Kettinakam) பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் நிஹால்.
இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டின் வாசலில் இருந்ததாக தெரியவருகிறது. பெற்றோர் வீட்டினுள் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுவனை தெருநாய்கள் சேர்ந்து இழுத்து சென்றுள்ளது. CoWIN Data Leaked?: கோவின் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரங்களை திருட்டுத்தனமாக வெளியிட்ட மோசடி கும்பல்?.. ஆதாரத்துடன் பரபரப்பு தகவல் அம்பலம்.!
சுமார் 300 மீட்டர் சிறுவனை இழுத்து சென்ற தெருநாய்கள், புதருக்குள் வைத்து கடித்து குதறி கொலை செய்து தப்பி சென்றது. சிறிது நேரம் கழித்து சிறுவனின் பெற்றோர் மகனை தேடி இருக்கின்றனர்.
சிறுவனை எங்கு தேடியும் காணாமல் பதறிப்போன நிலையில், அவன் புதர் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளான். முழப்பிலங்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவனை அனுமதித்தபோது, அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.