Vande Bharat Train: நாடாளுமன்ற உறுப்பினரின் போட்டோவை வந்தே பாரத் இரயிலில் ஒட்டிய ஆதரவாளர்கள்; கேரளாவில் சர்ச்சை.!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் வந்தே பாரத் இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கி வைக்கப்படும் நிலையில், அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிய கேரளா காங்கிரஸ் எம்.பியின் ஆதரவாளர்கள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 26 , சோரனுர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு (Palakkad, Kerala) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே ஸ்ரீகண்டன் (VK SreeKandan). இவரின் ஆதரவாளர்களின் சிலர் சோரனுர் இரயில் (Shoranur) நிலையத்திற்கு வருகை தந்த வந்தே பாரத் இரயிலின் மீது தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த பாலக்காடு இரயில்வே காவல் துறை அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஸ்ரீகண்டன், அப்பகுதியில் அரசியல் ரீதியான செல்வாக்கு வாய்ந்த நபராகவும் கருதப்படுகிறார். Natural Mango: இயற்கையாக பழுத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?.. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் விளக்கம்; அருமையான தகவல்.!
இதற்கிடையில் அவரின் ஆதரவாளர்களில் சிலர் கூட்டமாக திரண்டு மத்திய அரசின் வந்தே பாரத் இரயில் (Vande Bharat) மீது நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.