Mumbai Sea Link Accident: மும்பை பாந்த்ரா - வோர்லியை இணைக்கும் சுங்கச்சாவடியில் பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி.!

கடல் இணைப்பு பாலத்திற்கு முன்பு உள்ள சுங்கச்சாவடி நோக்கி அதிவேகத்தில் பறந்த கார், பிற 3 வாகனங்களின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

Mumbai Accident 10 Nov 2023 (Photo Credit: @ANI X)

நவம்பர் 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா - வோர்லி கடல் இணைப்பு பாலம் வழியே பயணிக்க, பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணியளவில், வோர்லியில் இருந்து பாந்த்ரா நோக்கி பயணிக்கும் வழித்தடத்தில், அதிவேகத்தில் வந்த கார், சுங்கச்சாவடியில் காத்திருந்த வாகனங்களில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட துயரம் நடந்தது. இறுதியில் வாகனங்களில் இருந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்கள் அனைவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Nabati Cashback: 10 ரூபாய் கேஷ்பேக் கொடுப்பதாக, தனிநபர்களின் தகவலை சேகரிக்கும் நபாட்டி; விபரம் இதோ.! 

Mumbai Accident 10 Nov 2023 (Photo Credit: @HT Times X) (2)

ஆனால், கவலைக்கிடமான வகையில் இருந்தவர்கள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்துக்கு காரணம் என்ன? அதிவேகமாக காரை இயக்கி வந்தது எதனால்? என விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் மது அருந்தி வாகனத்தை இயக்கினார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement