Fireworks Explosion: கேரளா கோவிலில் பயங்கர வெடி விபத்து.. 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
கேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 29, காசர்கோடு (Kerala News): கேரளா மாநிலம், காசர்கோடு (Kasaragod) மாவட்டம் நீலேஸ்வரில் அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பட்டாசு (Fireworks) வெடிப்பதற்காக குடோனில் பட்டாசுகள் வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 28) நள்ளிரவு திடீரென பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident) அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் சரமாரியாக வெடிக்க தொடங்கியுள்ளது. Road Accident: கார் மரத்தில் மோதி 2 பெண்கள் பலியான சோகம்..!
இதனால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவிழாவை காண வந்த பக்தர்களும் வெடி விபத்தில் சிக்கிக்கொண்டனர். திடீரென நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக, 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள், கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனை, அரிமலா மருத்துவமனை, மிம்ஸ் கண்ணூர், மிம்ஸ் கோழிக்கோடு, கே.ஏ.ஹெச். செருவாத்தூர், மன்சூர் மருத்துவமனை, ஏ.ஜெ. மெடிக்கல் காலேஜ் உட்பட பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தற்போது கோவில் நிர்வாக தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து: