Spurious Liquor: கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spurious Liquor Death in Bihar (Photo Credit: @cse_aspirantss X)

அக்டோபர் 17, சிவான் (Bihar News): பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு (Alcohol Prohibition) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இதுவரையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் சிவான் (Siwan) மாவட்டம் மற்றும் சரண் பகுதியில் பலர் கள்ளச்சாராயம் (Spurious Liquor) குடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று (அக்டோபர் 16) இரவு 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தனர். Viral Video: தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன..?

தற்போது, பலி எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, பீகார் அரசாங்கம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கள்ளச்சாராயம் எங்கு தயாரிக்கப்பட்டது, யாரால் விநியோகம் செய்யப்பட்டது என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து பலி எண்ணிக்கை உயர்வு: