அக்டோபர் 17, பாகல்பூர் (Bihar News): பீகார் மாநிலம், பாகல்பூர் (Bhagalpur) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு 48 வயது நபர் ஒருவர், நேற்று முன்தினம் (அக்டோபர் 15) மாலை அவரை கடித்த விரியன் பாம்பை (Russell's Viper) கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!
மீராசக் கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் மண்டல், கங்கை நதிக்கரையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விரியன் பாம்பு அவரது வலது கையை கடித்துள்ளது. உடனே அந்த பாம்பை (Snake) தைரியமாக பிடித்துக் கொண்டு தனது கழுத்தில் சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். இந்த வினோதமான சம்பவத்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். வைரலான வீடியோவில், சிகிச்சை தாமதமானதால் அந்த நபர் பாம்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தரையில் படுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்ற நபர்:
The video is from Bhagalpur. After being bitten by the snake🐍 , the man brought it with him to the hospital to help identify the species.
The emergency response system at the public hospital looks far from satisfactory. #Biharpic.twitter.com/PQgopQTE6L
— Kumar Manish (@kumarmanish9) October 16, 2024