Survey- PM Modi Most Popular Leader of World: அப்படிப்போடு.. உலகளவில் தலைசிறந்த, புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்.. இந்தியாவே பெருமிதம்.!
அதனை பறைசாற்றும் வகையில் பிரதமருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிப்ரவரி 22, டெல்லி (New Delhi): இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் (Parliament Election 2024) நடைபெறவுள்ளது. இரண்டு முறை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனி வியூகத்தை முன்னெடுத்து INDIA என்ற கூட்டணியை அமைத்து தனது தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முக்கிய தலைவர்களில் ஒருவர்: கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு திறம்பட செயல்பட்டு வந்துள்ளளது. பல நாடுகளுக்கும் தொடர்ந்து அரசுமுறை பயணம் மேற்கொண்டு, உலக நாடுகளுடன் இணக்கமான சூழலுடன், தன்னிறைவு பெரும் இந்தியாவின் முயற்சியும் தொடருவதால், நரேந்திர மோடி உலகளவில் கவனிக்கப்படும் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அடையாளம் பெற்றார். முந்தைய ஆண்டுகளில் இந்திய பிரதமர்கள் கவனிக்கப்பட்ட விதத்தில் இருந்து, புதிய மாறுதலுடன் பல நாடுகளில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்பட்டது. HC on Family Property: கணவர் தனது மனைவியின் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குடும்ப சொத்துக்களே - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
உலகளவில் பிரபலமான தலைவர்: இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களையே சிறந்த தலைவர்கள் என்று வியந்து பார்த்த காலங்கள் மலையேறி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் பிரபலமான தலைவராக உருவெடுத்து இருக்கிறார். அமெரிக்கா, ஐரோப்பா ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளின் தலைவர்களும் பிரதமரின் மதிப்பீடுகளுக்கு கீழ் உள்ளனர். சமீபத்தில் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சார்பில் உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வந்தன.
பிற அதிபர்களின் பட்டியல்: கணக்கெடுப்புகளின்படி, உலகளவில் 70% க்கு மேல் மதிப்பெண் பெற்ற ஒரே தலைவராக நரேந்திர மோடி இருக்கிறார். மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் ஓப்ராடோர் 65% மதிப்பெண் பெற்றுள்ளார். அர்ஜென்டினா நாட்டின் ஜனாபதிபதி ஜேவியர் மிலே 63% மதிப்பெண் பெற்றுள்ளார். போலந்து அதிபர் டொனால்ட் டஸ்க் 50% மதிப்பெண், சுவிச்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹர்ட் 51% மதிப்பெண் பெற்று இருக்கின்றனர்.