Allahabad High Court (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 22, அலகாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தனது மனைவியின் பெயரில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்நிலையில், தற்போது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், பெண்ணும் - அவரது மகனும் வசித்து வருகிறார்கள். தற்போது தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக சொத்தை மூன்றாவது நபருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவரின் பெயரில் சொத்துக்கள் உள்ளது மகனுக்கு தடையாக இருந்துள்ளது.

கணவர் வாங்கும் சொத்து குடும்ப சொத்து: இதனையடுத்து, தன்னை சொத்தில் உரிமை உடையவர் என உத்தரவிடக்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதிகள், குடும்பத் தலைவர் குடும்பத் தலைவியின் பெயரில் வாங்கும் சொத்து குடும்ப சொத்து என்று தீர்ப்பளித்து இருக்கின்றனர். இது தொடர்பான தீர்ப்பில், இல்லத்தரசியான மனைவியின் பெயரில் கணவர் வாங்கும் சொத்து குடும்ப சொத்து. சொந்த வருமானம் இல்லாத குடும்பத்தைச் சார்ந்த மனைவியின் பெயரில் கணவர் வாங்கிய சொத்து குடும்ப சொத்தாகவே கருதப்படும். இந்து மதத்தில் கணவர் தனது மனைவியின் பெயரில் சொத்துக்களை வாங்குவது இயல்பானது மற்றும் இயற்கையானது. Condom Distribution by Political Parties: வீடு வீடாக அரசியல்கட்சியின் பெயரில் கதவைத்தட்டி காண்டம் விநியோகம்; வாக்குக்காக அதிரிபுதிரியாக களமிறங்கிய கட்சியினர்.! 

மகனும் பங்காளரே: இறந்த தந்தையின் சொத்தில் உள்ள இணை உரிமையை அறிவிப்பதற்கான மகனின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனைவி சம்பாதித்த வருவாயில் சொத்து வாங்கப்பட்டதாக கருதப்பட்டாலும், வேறு விதமாக அது நிரூபணம் செய்யப்பட்டாலும், இது சொந்த வருமான சொத்தாகவே கருதப்படும். முறையீட்டாளர் தனது தந்தை வாங்கிய சொத்தில் தன்னை பங்குதாரர் என்று அறிவிக்க சிவில் வழக்கு கொடுத்துள்ளார். தற்போது அவர் தாயுடன் இருப்பதால், அவரும் பங்காளராகவே கருதப்படுவார்.

மேல்முறையீடுக்கு அனுமதி: பிறந்த தந்தையின் மனைவியின் பெயரில் சொத்துக்கள் இருப்பதால், அதனை மாற்றுவதற்கு தடை ஏதும் இருக்காது. குடும்ப சொத்தை அவர்களின் சுதந்திரமான உரிமையின் பேரில் மாற்றலாம். தந்தையின் மூலமாக தாயார் பெயரில் வாங்கப்பட்ட சொத்து, கூட்டுக்குடும்ப சொத்து என்பதால் அது தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது. இவ்வாறான தருணங்களில் மூன்றாம் தரப்பினரில் உரிமையை உருவாக்குவதில் இருந்து சொத்தை பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகும். இதன் பேரில் மனுதாரரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேல்முறையீடுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.