Paytm FASTag Stopped: பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி அறிவிப்பு..!
மார்ச் 15-ஆம் தேதிக்குள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 14, சென்னை (Chennai News): தேசிய நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பேடிஎம் ஃபாஸ்டேக்கை (Paytm FASTag) பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மார்ச் 15-ஆம் தேதிக்குள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு தெரிவித்துள்ளது. மார்ச் 15-ஆம் தேதிக்கு பிறகு, பயனர்கள் யாரும் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாது என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Tata Motors Investment In Tamil Nadu: தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் டாடா.. கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?.!
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி லிமிடெட், கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்த்ரா வங்கி மற்றும் பந்தன் வங்கி என மொத்தம் 39 நிறுவனங்கள் உள்ளன.