India Vs Pakistan Women's Cricket: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.. இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. இந்த போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அக்டோபர் 05, கொழும்பு (Cricket News Tamil): இலங்கையின் கொழும்புவில் இன்று இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி மாலை 3 மணிமுதல் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் முதலில் பேட்டிங் செய்த பிரதிகா ராவல் (Pratika Rawal) 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 32 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்லீன் டியோல் (Harleen Deol) 65 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 34 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். ஜெமியா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்நேஹ் ராணா (Sneh Rana) 32 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். தீப்தி ஷர்மா (Deepti Sharma) 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். ரிச்சா கோஷ் (Richa Ghosh) 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. India Vs Pakistan: பாகிஸ்தான் வெற்றிக்கு 248 ரன்கள் இலக்கு.. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!
இந்தியா எதிர் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி (India Vs Pakistan Women's Cricket Match):
தொடக்கத்தில் இந்திய அணி சிறிது தடுமாறினாலும், நிதானமாக வீரர்கள் ரன்களை குவிந்ததால் அணி 247 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 43 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் சித்ரா அமின் (Sidra Amin) 106 பந்துகளில் 81 ரன்கள் அடித்திருந்தார். நடாலியா பெர்வைஸ் (Natalia Pervaiz) 46 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். சித்ரா நவாஸ் (Sidra Nawaz) 22 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். எஞ்சிய அனைவரும் சொற்ப ரன்களில் வெயியேறினர். இதனால் பாகிஸ்தானின் தோல்வி வசமானது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். ஸ்நேஹ் ராணா 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இந்தியா., இந்தியா., வெற்றிகொண்டாட்டம்:
Indiaaaa.... Indiaaa.... 🇮🇳👏🏻🙌🏻
And just like that, another one-sided clash in the Greatest Rivalry ends in #TeamIndia’s favour! 💪🏻
WATCH #WomenInBlue next in #CWC25 👉🏻 IND 🆚 SA | THU, OCT 9, 2 PM on Star Sports Network & JioHotstar pic.twitter.com/NVQORVxiLk
— Star Sports (@StarSportsIndia) October 5, 2025
(The above story first appeared on LatestLY on Oct 05, 2025 11:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

