NCW Vs SAW ICC Women's World Cup 2025 (Photo Credit: @ICC X)

அக்டோபர் 06, இந்தூர் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஏழாவது போட்டி நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) இடையே நடைபெற்றது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. NZW Vs SAW: நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. நின்று விளையாடும் நியூசிலாந்து.. சுவாரஷ்யமாகும் ஆட்டம்.! 

தென்னாபிரிக்கா Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டி (South Africa Vs New Zealand Women's Cricket):

அந்த அணியின் சார்பில் விளையாடிய ஜியார்ஜியா 68 பந்துகளில் 31 ரன்கள், அமெலியா கெர் 42 பந்துகளில் 23 ரன்கள், சோபியா 98 பந்துகளில் 85 ரன்கள், ப்ரூக்கே 37 பந்துகளில் 45 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் நொன்குழுகோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 47.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 231 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.

தென்னாபிரிக்க அணி அசத்தல் வெற்றி:

மறுமுனையில் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. தஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 89 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அசதி இருந்தார். சுனி லுஸ் 114 பந்துகளில் 83 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 40.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி அடைந்தது.

தஸ்மின் அதிரடி காட்டிய தருணம்:

தென்னாபிரிக்க அணி அதிரடி வெற்றி: