அக்டோபர் 06, இந்தூர் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்தியா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையேயான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று ஏழாவது போட்டி நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. India Vs Pakistan Women's Cricket: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.. இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!
நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (New Zealand Vs South Africa Women's Cricket)
முதலில் களமிறங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுசி ஒரு பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, ஜியார்ஜியா 68 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். அமெலினா கெர் 42 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். 34 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழந்த நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 159 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்து வீசிய கேப், கிளார்க், மலாபா, ட்ரையோன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர். ஆட்டம் தொடக்கம் முதலாகவே ஏற்ற இறக்கம் என நிதானத்துடன் சென்றாலும், நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் ரன்கள் குவிப்பில் கவனமாக இருந்தனர்.