Copper Mine Accident: ராஜஸ்தான் தாமிர சுரங்க விபத்து; 5 மணிநேர போராட்டத்துக்குப் பின் 14 பேர் மீட்பு..! ஒருவர் பலி..!
ராஜஸ்தானில் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மே 15, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டம், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் (Kolihan Mine) ஒன்று உள்ளது. அங்கு நேற்றிரவு லிப்ட் இடிந்து விழுந்தது. இதில், மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 15 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் பணிகளை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில், சுரங்கத்தில் இருந்து 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். Redmi 12 5G Amazon Offer: ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு..! அமேசானில் அசத்தல் ஆஃபர்..!
இதனையடுத்து, அவர்களுக்கு முதலுதவி அளித்த பிறகு, அவசர ஊர்தி மூலமாக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், உள்ளே சிக்கியுள்ள 12 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ள 14 பேரை பத்திரமாக மீட்டனர். லிப்ட் அறுந்து சுமார் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த 14 பேர், 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் முதல் அமைச்சர் பஜன்லால் சர்மா அவர்கள், விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.