மே 15, சென்னை (Technology News): சியோமி நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, அமேசானில் ரூ.1,250 வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.10,000 பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. Benefits Of Yoga: நாம் தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

விலை விவரம்:

ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட் போனில் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்டவை ரூ.11,999 என்றும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதியுள்ள ஸ்மார்ட் போன் ரூ.12,499 என்ற விலைக்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உள்ளவை ரூ.14,499 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 128GB மெமரி மாடலுக்கு 1,250 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,749 என மாறி உள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.750 உடனடியாக தள்ளுபடி செய்யப்படும். இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ.9,999 ஆனா குறைக்கிறது. இந்திய சந்தைகளில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.