India Elections 2024 Phase 5: விறுவிறுப்புடன் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு; வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு.!

அதனை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Phase 5 Election 2024 (Photo Credit: @ANI X)

மே 20, புதுடெல்லி (New Delhi): உலகமே கவனிக்கும் இந்திய பொதுத்தேர்தல்கள் 2024 (India Elections 2024) நான்கு கட்டங்கள் கொண்ட வாக்குப்பதிவை நிறைவு செய்து, இன்று ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் அடியெடுத்து வைத்துள்ளது. எஞ்சிய 6 மற்றும் 7வது கட்ட பொதுத்தேர்தல் (Lok Shaba Elections 2024) மே 25 மற்றும் ஜூன் 03 முறையே நடைபெறுகிறது. பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04ம் தேதி வெளியாகிறது. Fake Currency Notes: யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகள் அச்சடிப்பு; வறுமையை போக்க புது டெக்னீக்.. 26 இளைஞர் கைது.! 

ஐந்தாம் கட்ட தேர்தல்: இந்த தேர்தலில் 49 மக்களவை தொகுதிகள், மாநிலங்களவை தேர்தல் ஆகியவை நடைபெறுகின்றன. மக்களவை தொகுதிகளை பொறுத்தமட்டில் பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், மஹாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா 1 தொகுதி என 49 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் உள்ள 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவுபெறும் தேர்தலில், மொத்தமாக 695 வேட்பாளர்கள் மக்களின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க திரண்டு நிற்கும் மக்கள்: