Layoff at ShareChat: ஷேர் சாட்டின் ஆட்குறைப்பு நடவடிக்கை... 200 ஊழியர்கள் பணிநீக்கம்..!
ஷேர்சாட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொஹல்லா டெக் (Mohalla Tech) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஷேர் சாட் (ShareChat) தனது ஊழியர்களில் 500 பேரை, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்து, செலவுகள் குறைந்து அடுத்த காலாண்டில் நிறுவனம் லாபகரமான நிலையை அடையும் என மொஹல்லா டெக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் 2023 ஆம் நிதியாண்டில் ஷேர்சாட் நிறுவனத்தின் வருவாய் 59.4 சதவீதம் உயர்ந்து 533 கோடி ரூபாயாக இருந்தாலும், நஷ்டம் 3241 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Girl Delivery Baby Rescued From Srivaikuntam: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது: தாய்-சேய் நலம்.!