Maharashtra Government Hospital Deaths: 12 குழந்தைகள், 12 பெரியவர்கள் உயிரிழப்பு.!: அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட துயரம்.!
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
அக்டோபர் 03, நன்தேட் (Maharashtra News): மகாராஷ்டிராவின் நன்தேட் (Nanded) மாவட்டத்தில், பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளை உட்பட 24 பேர் உயிரிழப்பு. இந்த மாவட்டத்தில் சங்கர் ராவ் சவான் (Shankar Rao Chavan) என்ற பெயரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் பற்றி அந்த மருத்துவமனை டீன் (Dean), “கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் என மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாம்பு கடிக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள். ஊழியர்கள் பணியிட மாற்றம் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக நாங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
இங்கே 70-80 கி.மீ சுற்று வட்டாரத்தில் இந்த ஒரு மருத்துவமனை தான் இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலரும் வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள். சில நாட்கள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. Fire Breakout in Gujarat: குஜராத்தில் பாம்பே மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.!: சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு படைகள்.!
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஹாஃப்கைன் (Haffkine) நிறுவனத்தில் தான் மருந்துகள் பெறப்பட வேண்டும். ஆனால் அது, உரிய நேரத்தில் நடைபெறாத காரணத்தால், அருகில் இருக்கும் தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனை டீன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மாறாக மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருந்ததாகவும், மேலும் இந்த நிதி ஆண்டில் 4 கோடி ரூபாய் வரை மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது.
அந்த மாநிலத்தின் முதலமைச்சர், ஏக்நாத் ஷிண்டே (Eknat Shinde) பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, இது மும்பையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நோயாளிகளின் மரணம் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.