Businessman Dies of Heart Attack: உடற்பயிற்சி செய்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்..!

மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Men Died of Heart Attack (Photo Credit: @RisingPiku X)

ஜூலை 22, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் (Gym) ஒன்றில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சீமான் மோட்டார்ஸ் உரிமையாளரான கவல்ஜித் சிங் பக்கா என்பவர் வழக்கம்போல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, திடீரென சுருண்டு விழுந்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Carrot Benefits: தினமும் கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

உடனே அவரை மீட்டு, உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.