Zomato Food Bill: "என்னது கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாயா?.." ஆர்டர் செய்தவற்கு ஆப்பு..!

கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zomato Food Bill (Photo Credit: @kothariabhishek X)

ஆகஸ்ட் 01, மும்பை (Maharashtra News): வீடு மற்றும் அலுவலகங்களுக்கே டெலிவரி செய்யப்படும் ஆன்லைன் உணவு, நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் இத்துறையில் கால் பதித்து வருவதுடன் போட்டிபோட்டி வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றன. அந்த வகையில், ஸ்விக்கி (swiggy) மற்றும் சோமேட்டோ (zomato) உள்ளிட்ட நிறுவனங்கள் இத்துறையில் பெரும் சேவையாற்றி வருகின்றன.

சோமேட்டோவில் ஆர்டர்: இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் உணவகக் கட்டணத்தை சோமேட்டோ (Zomato) நிறுவனத்தின் பில் உடன் ஒப்பிட்டு அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பத்திரிக்கையாளர் அபிஷேக் கோத்தாரி கூறுகையில், உணவகத்தில் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி, சோமேட்டோவில் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 60 ரூபாய்க்கு கிடைத்த தட்டு இட்லி, சோமேட்டோவில் 161 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவர் வைல் பார்லேயில் உள்ள உடுப்பி 2 மும்பை என்ற உணவகத்தில் ஆர்டர் செய்துள்ளார். Cancer in India: புற்றுநோய்க்கு காரணமாகும் பழக்கங்கள்; இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு.!

பத்திரிக்கையாளர் கடையில் சென்று சாப்பிட்ட பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் சோமேட்டோ உடன் ஒப்பிட்டார். கடையில் ரூ.320 செலுத்தி சாப்பிட்டுள்ளார். இதே உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தால் ரூ.740 பில் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு வைரலாகியதைத் தொடர்ந்து சோமேட்டோ இவருக்கு பதிலளித்துள்ளது.

சோமேட்டோவின் பதில்: அதில், "எங்கள் பிளாட்ஃபார்மில் உள்ள விலைகள் எங்கள் உணவக கூட்டாளர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், உங்கள் கவலைகள் மற்றும் கருத்துக்களை அவர்களுடன் பகிர்கிறோம்." என்று குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர், எங்களின் கவலையை புரிந்து கொண்டமைக்கு நன்றி என்றார்.

உண்மையில், பல வாடிக்கையாளர்களுக்கு உணவகங்களை விட Zomato மற்றும் Swiggy போன்ற உணவு விநியோக தளங்களில் உணவு விலை அதிகம் என்பது தெரியாது. ஏனெனில் இந்த நிறுவனங்கள் உணவு ஆர்டருடன் சேவை மற்றும் பிளாட்ஃபார்ம் கட்டணங்களும் அடங்கும். ஆஃப்லைன் மெனுக்களை விட ஆன்லைன் உணவு டெலிவரி விலை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்.