College Security Guard was Murdered: கல்லூரி வளாகத்தில் செக்யூரிட்டி கொடூரமாக குத்திக்கொலை; கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்ததால் மாணவர் வெறிச்செயல்.!
இந்த துயரம் குறித்த விவகாரத்தில், 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 04, ஹெப்பால் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கெம்பாபுரா ஹெப்பால் (Kempapura Hebbal) பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பாதுகாவலராக ஹன்சமரனஹள்ளி பகுதியை சேர்ந்த ஜெய் கிஷோர் (Jai Kishore Roy) ராய் (வயது 52) என்பவர் பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் பிஏ துறையில் மூன்றாம் ஆண்டு மாணவராக பார்கப் ஜோதி (Bhargab Jyothi Barman) பர்மன் என்ற 22 வயது இளைஞர் பயின்று வருகிறார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது கல்லூரிக்கு அருகேயுள்ள தங்கும் விடுதியிலேயே பணியாற்றி வருகிறார்.
காவலாளி - மாணவர் வாக்குவாதம்:
இதனிடையே, சம்பவத்தன்று கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், மாணவர்கள் பலரும் கல்லூரியில் இருந்தனர். அச்சமயம் மதியம் 01:00 மணிக்கு மேல் மாணவர் பர்மன் தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்துள்ளார். அவரை இடைமறித்த பாதுகாவலர் ஜெய் கிஷோர், அந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Koyambedu Omni Bus Fire: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆம்னி பேருந்து உட்பட 10 வாகனங்கள் தீ எரிந்த விவகாரம்; சிகிரெட் பிடித்ததால் வந்த வினை.!
கல்லூரிக்குள் மீண்டும் அனுமதிக்கப்படாத மாணவர்:
அப்போது பர்மன் மூன்றாம் ஆண்டு பயிலும் என்னை நீ எப்படி தடுப்பாய்? என கேள்வி எழுப்ப, அங்கு மாணவர் - பாதுகாவலர் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதற்குப்பின் பாதுகாவலரின் எச்சரிக்கையையும் மீறி பரமன் வெளியே சென்றிருந்த நிலையில், மாலை 03:30 மணியளவில் அவர் திரும்பி வந்துள்ளார். அச்சமயம் பர்மன் மது அருந்தியாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் துறையில் முதல் மாணவராக இருந்த பர்மனை, பாதுகாவலர் மேற்படி கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை.
கத்தியால் சரமாரியாக (Security Gaurd Brut) குத்திக்கொலை:
அச்சமயம் மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துகொள்ளவே, ஆத்திரமடைந்த பரமன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த கத்தியால் பாதுகாவலர் ஜெய் கிஷோரை கடுமையாக தாக்கி இருக்கிறார். பின் அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அவரை பிற பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், உயிருக்கு போராடிய ஜெய் கிஷோரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காவலர்கள் விசாரணை, குற்றவாளி கைது:
இதனிடையே, தகவல் அறிந்து வந்த அம்ருதஹள்ளி காவல்துறையினர், கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மாணவர் பார்கப் ஜோதி பர்மனை கைது செய்தனர். மருத்துவமனையில் பாதுகாவலரின் உடல் பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி சம்பவம் குறித்து மாணவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை சிறையில் அடைத்தனர்.