Digital Arrest Scam: போலி காவல்துறையினரிடம் டிஜிட்டலில் கைதான பாட்டி.. 83 லட்சம் மோசடி.. டெல்லியில் பரபரப்பு..!
83 லட்சத்தை இழந்தார்.
ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள சி ஆர் பார்கில் வசித்து வருபவர் தான் கிருஷ்ணா தாஸ் குப்தா. இவருக்கு வயது 72. இவரது செல்போனிற்கு கடந்த மே 24ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரின் மொபைல் எண் துண்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பாட்டி அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் தாங்கள் மும்பை காவல்துறையினர் என்று கூறி அப்பாட்டியிடம் பேசி உள்ளனர். Money Doubling Scam: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000.. மோசடி கும்பல் கைது..!
மேலும் அவர் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியதை அடுத்து, அவரை கைது செய்வதாக இவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரை வீடியோ காலில் வரவைத்து காலை 9 மணி முதல் இரவு 10.30 மணி வரை எங்கும் செல்லாமல் இருக்கும்படி வைத்துள்ளனர். மேலும் விசாரணைக்காக அவரது வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் காவல்துறைக்கு மாற்றும்படி கூறியுள்ளனர். அவரும் இந்த போலி காவல்துறையினரை நம்பி தனது வங்கியில் இருந்த 82 லட்சத்தினையும் கொடுத்துள்ளார். அவர் ஏமாற்றமடைந்ததை இரவில் தான் உணர்ந்துள்ளார். அதன்படி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது உண்மையான காவல்துறையினர் போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.