YouTuber Sparks Outrage Over Baby Gender Clip (Photo Credit : Youtube / Pixabay)

அக்டோபர் 04, தென்காசி (Tenkasi News): கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது இந்திய சட்டப்படி குற்றமான செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பல இடங்களில் திருட்டுத்தனமாக இது போன்ற நடவடிக்கை தொடர்கிறது. இந்த விஷயம் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி குழந்தையின் பாலினத்தை கூறும் கும்பலையும் கைது செய்து வருகின்றனர். சிசுக்கொலைகளை தடுக்க இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் எச்சரிக்கையை மீறி தொடரும் இந்த செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குழந்தை பாலினத்தை கண்டறிய அனுமதி வழங்க கோரி வீடியோ வெளியிட்ட இளைஞர் :

இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியர் ஒருவரின் முகத்தில் கூட சிரிப்பு இல்லாமல் வருத்தத்துடன் இருந்ததாகவும், இதனால் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள அரசு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் பேசிய வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவில் இளைஞர் பேசியதாவது, "நேற்று காலை ஒருவருக்கு குழந்தை பிறந்ததாக மருத்துவமனைக்கு பார்க்க நேரில் சென்றோம். அப்போது அதே மருத்துவமனையில் 8 பேருக்கு குழந்தை பிரசவம் நடந்திருந்தது. Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!

ஆண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு - இளைஞர் பேச்சு :

இதில் ஒரு குழந்தை கூட ஆண் குழந்தை இல்லை. அனைத்தும் பெண் குழந்தைகள் தான். ஏற்கனவே ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. இதே போன்ற பிரச்சனை நீடித்தால் எதிர்காலத்தில் முக்கியமான பிரச்சனை ஏற்படலாம். குழந்தை எந்த குழந்தையாக இருக்கிறது? அது வேண்டுமா? வேண்டாமா? என்பதை பெற்றோர் முடிவு செய்ய பாலினத்தை அறிந்து கொள்ளும் முறைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பதாக நீங்கள் சொல்லலாம்.

பெற்றோர்கள் தான் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க வேண்டும் என உணர்ச்சி பொங்க பேச்சு :

ஆனால் ஒருமுறை நாம் பிறக்கிறோம். அந்த ஒரு முறை பிறக்கும் குழந்தை எதுவாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானித்துக் கொள்ளட்டும். பணம் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் முன்னதாகவே தங்களது குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கொண்டு இவ்வாறு செயல்படுகிறார்கள். ஏழைக்கு மட்டும் அது ஏன் கிடைக்கவில்லை? என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரைலாகவே இந்த விஷயத்திற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பிய நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தீபன் என்ற யூடியுபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தென்காசி இளைஞரின் சர்ச்சை வீடியோ :