ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் நடைபெற்று வந்தது. இந்த மனு விசாரணையின் போது சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி வரும் துப்புரவு பணியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு :
மேலும் காவல்துறையினர் அனுமதி வழங்கும் இடத்தில் அவர்கள் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி இருப்பதாகவும் தெரிவித்தனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் காவல்துறையினர் துப்புரவு பணியாளர்களை அங்கு இருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிய கூலித் தொழிலாளர்களை சென்னை மாநகராட்சி ஒடுக்குமுறையை கையாண்டு அகற்றுவதாக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. Coolie: கூலி படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. லோகேஷ்-க்கு பாராட்டு.!
துப்புரவு பணியாளர்கள் கைது குறித்து விவரிக்கும் போராட்டக்குழு :
போராட்டத்தில் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது படுகாயம் அடைந்த தூய்மை பணியாளர்கள்.#ChennaiCorporation | #SanitaryWorkers | #Neelamsocial pic.twitter.com/xaLZ8AzxeP
— Neelam Social (@NeelamSocial) August 13, 2025
இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் அடைத்து வைப்பு :
இதனிடையே சென்னை ரிப்பன் மாளிகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றிரவு கைது (Sanitation Workers Arrest) செய்யப்பட்டனர். இவர்கள் அங்குள்ள திருமண மண்டபங்களில் உறவினர்களிடம் கூட பேச முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை நேரில் பார்த்துள்ளது சர்ச்சையை சந்தித்துள்ளது.
கூலி பட கொண்டாட்டத்தில் மக்கள் :
அதேபோல கூலி திரைப்படத்தின் கொண்டாட்டத்திற்காக அதே பகுதியில் இருக்கும் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கைது செய்து அடைக்கப்பட்ட விஷயம் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஒரு பக்கம் கூலித்தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் சினிமா கூத்தாடிகளை முன்னிறுத்தி கூலி படத்திற்காக மக்கள் கொண்டாட்டம் (Coolie Movie Celebration) என்ற பெயரில் 3 மணி நேரத்தை செலவழித்து வருவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத முதல்வர், படத்தின் வெளியீடை மட்டும் நேரில் பார்த்து பாராட்டியுள்ளது எப்படிப்பட்டது? எனவும் போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
துப்புரவு பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு குவியும் கண்டனங்கள் :
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகிறோம் என நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை நீதிமன்றம் சொன்ன அத்தனையையும் 24 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விட்டு தான், அடுத்த வேலை என்கிற நிலைப்பாடையா திமுக அரசு எடுத்தது? இல்லை, அப்படியிருக்க இதில் மட்டும்,
— Dr. Nagajothi 👩🏽⚕️ (@DrNagajothi11) August 14, 2025